Monday, December 31, 2012

பலகாய் குழம்பு


தேவையானவை :


 * மொச்சைக் காய்   – 200 கிராம்
    * பறங்கிக்காய்       - 250 கிராம்
    * கத்தரிக்காய்       – 200 கிராம்
    * அவரைக்காய்      – 200 கிராம்
    * தட்டப்பயத்தங்காய் – 200 கிராம்
    * சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 200 கிராம்
    * உருளைக்கிழங்கு    - 200 கிராம்    
    * தக்காளி            -  100 கிராம்
    * சின்ன வெங்காயம்  - 100 கிராம்
    * ப.மிளகாய்          -  10
    * வரமிளகாய்         - 10
    * பாசிப்பருப்பு         - 200 கிராம்
    * மஞ்சள்த்தூள்       - 1 ஸ்பூன்
    * எண்ணெய் (அ) வெண்ணைய்  (தேவைக்கு)
    * உப்பு      - தேவைக்கு
    * கறிவேப்பில்லை , 
    * கொத்தமல்லி – சிறிது


செய்முறை :

*காய்கள் அனைத்தையும் சுத்தம் செய்து நறுக்கிகொள்ளவும். 

*ஒரு அகலமான பாத்திரத்தில் பாசிப்பருப்பை போட்டு பருப்பு முழ்கும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள் போட்டு அடுப்பில் வைக்கவும்.

*பருப்பு ஒரு கொதி வந்ததும் அதில் அனைத்து காய்களையும் போட்டு வேக விடவும். (காய்கள் மூழ்கும் அளவிற்க்கு தண்ணீர் இருக்க வேண்டும்)

*காய்களை போட்ட சிறிது நேரத்தில் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், வரமிளகாய், கறிவேப்பில்லை, உப்பு என அனைத்தையும் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

*அனைத்து காய்களும் (குழம்பு கொஞ்சம் திக்கா இருக்கட்டும்) ஒரு சேர வெந்ததும் வெண்ணையை (எண்ணெய்) ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் மிகவும் சுவையான பலகாய்குழம்பு தயார்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More